அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: டிரம்பிற்கு போட்டியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வரர்!

Date:

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றார்.

அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ளதால், இப்போதே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அமெரிக்காவில் பரவத் தொடங்கிவிட்டது.

2024 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடனே போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே போல, குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மறுபடியும் களம் காண்பார் என்றே சில தினங்களுக்கு முன்பு வரை கூறப்பட்டு வந்தது.

குடியரசுக் கட்சியில் இருந்து வேறு எவரும் தன்னை எதிர்த்து வேட்பாளர் போட்டியில் நின்றுவிடக் கூடாது என்பதில் டிரம்ப்பும் கவனமாக இருந்தார்.

இதற்காக, குடியரசுக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரிடம் பேசி டிரம்ப் தனக்கு ஆதரவை திரட்டி வருகிறார்.

இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசு கட்சி சார்பில் போட்டியிடபோவதாக ஏற்கனவே டிரம்ப் அறிவித்த நிலையில் விவேக்கும் களமிறங்கவுள்ளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பே போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட சமயத்தில், அக்கட்சியில் இருந்தே அவருக்கு எதிராக பலரும் உருவாகி வருவது டிரம்புக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தற்போது தயாராகி வரும் விவேக் ராமசாமி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...