தஜிகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் 6.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:37 மணியளவில் சுமார் 20.5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியம் மற்றும் தஜிகிஸ்தானின் எல்லைக்கு அருகே இன்று (இலங்கை நேரப்படி மு.ப. 6.07) மணியளவில் சுமார் 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, சீன அரச தொலைக்காட்சியான CCTV, சீன பூகம்ப வலையமைப்பு மையத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் சீன எல்லையில் இருந்து 82 கிமீ தொலைவில் பதிவாகியுள்ளதோடு, ஜின்ஜியாங் பிராந்தியத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கஷ்கர் மற்றும் ஆர்டக்ஸ் ஆகிய இடங்களில் வலுவாக உணரப்பட்டதாக CCTV தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஆப்கானிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லையில் உள்ள அரை-தன்னாட்சி கிழக்குப் பகுதியான கோர்னோ-படக்ஷானில் அவதானிக்கப்பட்டுள்ளது.