இந்த வருடம் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் 56 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க அரசாங்கம் இந்த நிதியை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்திற்க் கொண்டு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
விளைச்சல் குறைவாலும், உற்பத்தி செலவு அதிகரிப்பாலும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சிலர் கூறியுள்ளனர்.
அதற்கேற்ப உரம் மற்றும் டீசல் இலவசமாக விநியோகம் உட்பட பல வேலைத்திட்டங்களை அரசாங்கம் கடந்த மாதங்களில் ஆரம்பித்துள்ளது.