வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேருக்கு மறியல்!

Date:

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை இன்று கடுவலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்குள், பலவந்தமாக நுழைய முயற்சித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை, திறக்குமாறு வலியுறுத்தி, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நேற்று பிற்பகல் கல்வி அமைச்சுக்கு சென்றனர்.

இதன்போது, கல்வி அமைச்சின் வளாகத்தில், அமைதியற்ற நிலை ஏற்பட்டதையடுத்து, 62 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...