ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் தாக்குதல்: உடனடி அறிக்கை கோருகிறது மனித உரிமை ஆணைக்குழு

Date:

நேற்றைய தினம் கொழும்பு யூனியன் பிளேஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி  ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு  கோரியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணி போராட்டத்தை நடத்துவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாத கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவின் யூனியன் பிளேஸில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியமை தொடர்பில் உடனடி விசாரணையை ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

Popular

More like this
Related

சலேவின் மருத்துவ அறிக்கை குறித்து நீதிமன்ற தீர்ப்பு

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் கொழும்பு தேசிய...

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2027 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடவும், அதனைத்...

சோதனையிலிருந்து சாதனைக்கு..; MDC-யின் சாதனைப் பயணம்1

-எழுதியவர். ஆர்ஸ் ஷித்தீக் கல்வி, மனஉறுதி மற்றும் சமூக முன்னேற்றத்தின் இரண்டு ஆண்டுகள்...

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்; முடங்கியது மாட்டு இறைச்சி வணிகம்.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், டாங்ரா (Tangra) பகுதியில்...