‘பொலிஸாருக்கு தொடர்ந்தும் தங்கள் கடமையை நினைவூட்ட வேண்டும்’

Date:

நாட்டில் பல மாதங்கள் பரவலான ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகும், இலங்கை பொலிஸாருக்கு தொடர்ந்தும் தங்கள் கடமையை நினைவூட்ட வேண்டும் என்பது கவலை அளிக்கிறது என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் பொலிஸாரால் சட்டவிரோதமாக நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பயன்படுத்தியதன் விளைவாக எதிர்ப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே சர்வதேச மன்னிப்பு சபையின் பிராந்திய ஆராய்ச்சியாளர் ஹரீந்திரினி கொரையா தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அதிகாரிகள் தமது சக்தியைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

காணொளி காட்சிகளின்படி, எதிர்ப்பாளர்கள் தப்பிப்பதற்கான சாத்தியம் இல்லாமல் ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

எனினும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் மற்றும் தமது சக்தியைப் பயன்படுத்துவதில் தரநிலைகளை மீறி இலங்கை பொலிஸார் நீர்தாரை மற்றும் கண்ணீர் புகையை பயன்படுத்தியதாக ஹரீந்திரினி கொரையா சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...