அரசாங்கம் நிதி இல்லை என்று கூறிய போதிலும் இரு மாகாணங்களில் 90 நாட்களுக்குள் தேர்தலை நடத்த பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிதி அமைச்சு தேர்தலுக்கு நிதி வழங்காத நிலையிலும் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடாத சூழலிலும் ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக திகதியை அறிவித்தார்.
இருப்பினும் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் ஜனாதிபதியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர்கள் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டனர்.
இரண்டு மாகாண தேர்தல்களுக்கும் 15 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் தேவை என்று பாகிஸ்தான் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தலை தடுக்க நிர்வாக, சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நாட்டின் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, நாட்டின் பொதுத் தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது.