இடை நிறுத்தப்பட்ட குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப்பணிகளுக்கு சவூதி அபிவிருத்தி நிதியம் நிதியுதவி!

Date:

கிண்ணியா, குறிஞ்சாக்கேணிப் பாலத்தினை நிர்மாணிக்க சவூதி அபிவிருத்தி நிதியம் (SFD) நிதி உதவி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் (SFD) பிரதிநிதிகளுடான கலந்துரையாடலின்போது குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிப்பதற்கான நிதி உதவியினை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட குறிஞ்சாக்கேணிப் பாலத்தினை நிர்மாணிப்பது தொடர்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளரிடம் பல தடவைகள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கிண்­ணியா நகர சபை­, கிண்­ணியா பிர­தேச சபை­க்கு உட்பட்ட பகுதிகளை இணைக்­கின்ற 100  மீற்றர் நீள­மான பாவ­னைக்கு உத­வாத  இப்­பா­லத்­தினை பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் தின­சரி பயன்­ப­டுத்தி வந்­தனர்.

இதற்கு பதி­லாக புதிய பால­மொன்­றினை மூன்று கட்­டங்­க­ளாக நிர்­மா­ணிக்க நெடுஞ்­சா­லைகள் அமைச்சின் ஆலோ­ச­னையின் பிர­காரம் வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை நட­வ­டிக்கை எடுத்­தது.

கடந்த 2017ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த பாலம் சேதமடைந்து போக்குவரத்து செய்ய முடியாத நிலையிலுள்ளது.

இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி குறித்த பாலம் அமைந்துள்ள பிரதேசத்தை படகு வழியாக கடக்க முயன்ற பாடசாலை மாணவர்கள் 09 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த பெரும் சோகம் இடைபெற்றிருந்தது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...