அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கிண்ணியா கிளை, துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண காசோலையை வழங்கியுள்ளது.
அதற்கமைய நேற்றையதினம் கொழும்பிலுள்ள துருக்கி தூதரகத்திடம் ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள் துருக்கி தூதரகத்தின் அதிகாரிகளுக்கு குறித்த காசோலையை கையளித்துள்ளனர்.
இதன்போது கிண்ணியா மக்கள் மற்றும் ஜம்இய்யதுல் உலமா சபையின் மதிப்புமிக்க ஆதரவிற்கு துருக்கி தூதரகம் நன்றியை தெரிவித்தது.