போக்குவரத்து விதிகளை மீறினால் நடவடிக்கை:சாரதிகளுக்கான விஷேட அறிவித்தல்!

Date:

மேல் மாகாணத்திற்குள் இடம்பெறும் வாகன விபத்துக்களை குறைப்பதற்கு பொலிஸாரால்  கொண்டுவரப்பட்ட புதிய திட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் அனைத்து பொலிஸ் பிரிவிற்கும் அமுலாகும் வகையில் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, சாரதி அனுமதிபத்திரமின்றி வாகனத்தை செலுத்துதல், 18 வயதிற்கு குறைந்தவர்கள் வாகனத்தை செலுத்துதல், வாகன வருமானவரிப்பத்திரம் மற்றும் காப்புறுதி சான்றிதழ் இன்றி வாகனத்தை செலுத்துதல், வீதி விதிமுறைகளை மீறுதல், சுற்றுவட்டங்களுக்கு அருகில் இழைக்கும் தவறுகள், வீதி வெள்ளைக்கோடு வீதி மாறுமிடத்தில் மேற்கொள்ளும் தவறுகள் பொலிஸாரால் கண்காணிக்கப்படும்.

மேலும், ஒழுங்கைகள் மாறுமிடத்தில் இழைக்கும் தவறுகள், வீதி சமிக்ஞை விளக்கு விதிகளை பின்பற்றாமை, பேருந்து நிறுத்தும் நிலையங்களில் இழைக்கும் தவறுகள், தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்தல், பாதுகாப்பு தலைக்கவசமின்றி மோட்டார் மோட்டார் சைக்கிள் செலுத்துதல் ஆகிய தவறுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்திற்குட்பட்ட சாரதிகளுக்கு இது தொடர்பில் விளக்கம் தேவையாயின் அருகிலுள்ள பொலிஸ்  நிலையங்களில் கோரிக்கை விடுக்க முடியும் என்றும் பொலிஸ்  ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...