துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் இன்று முதல் தடவையாகக் கூடவுள்ளது!

Date:

எட்டு துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் இன்று(08) மற்றும் நாளை(09) ஆகிய தினங்களில் முதல் தடவையாகக் கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

இதற்கமைய இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் எட்டுக்குமான தலைவர்கள் முதலாவது கூட்டத்தில் நியமிக்கப்படவிருப்பதுடன், இதில் நான்கு குழுக்களுக்கான தலைவர்கள் ஆளும் கட்சியிலிருந்தும், நான்கு குழுக்களுக்கான தலைவர்கள் எதிர்க்கட்சியிலிருந்தும் நியமிக்கப்படவிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பதினேழு துறைசார் மேற்பார்வைக் குழுக்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அண்மையில் சபையில் அறிவித்திருந்ததுடன், இதில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எட்டுக் குழுக்களே இன்று மற்றும் நாளை கூடவுள்ளன.

1) மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வை குழு.

2) நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வை குழு

3) பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழு

4) சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

5) சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வை குழு

6) பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வை குழு

7) பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வை குழு

8) வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வை குழு

Popular

More like this
Related

நிலவும் சீரற்ற வானிலை: க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர உதவி இலக்கங்கள் அறிவிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு...

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல் நீடிப்பு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது...

புனித மக்கா மண்ணில் மிளிரும் இலங்கையின் குரல்: சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸயீத் முஹம்மத் இப்பத்!

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம்...