இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான வரி அதிகரிப்பு!

Date:

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட வர்த்தக வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான விசேட வர்த்தக வரி 20 ரூபாவில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வரி திருத்தம் தொடர்பான வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட புழக்கத்தில் இல்லாத நினைவு நாணயத்தை விற்பனை செய்ய மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...