‘செலுத்த முடியாது, மின் கட்டணத்தை திரும்ப பெறு’:அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்

Date:

எதிர்வரும் 15 ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று (9) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிய வகையில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களும் இன்று (09) முதல் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

இதனிடையே, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச் சுமைக்கு எதிராகவும் மருந்துப் பற்றாக்குறைக்குத் தீர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தும், பல சுகாதார நிபுணர் சங்கங்கள் ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம், இன்று (09) காலை 8 மணியுடன் நிறைவடைந்தது.

அத்துடன், சம்பள முரண்பாடு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளுக்கான கொடுப்பனவுப் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பல ஆசிரியர் சங்கங்கள் நேற்று (08) கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவை சந்தித்தன.

இதேவேளை கொழும்பு – புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ‘எதிர்வரும் 15 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் இலங்கை முடங்கும் ” என ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் சாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...