குருநாகல் மாவட்டத்தின் தித்தவல்கஹவல ஹிரிபிடியவில் அல் ஹிக்மா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் புதிய கட்டிட திறப்பு விழா அண்மையில் பாடசாலை அதிபர் மஸாஹிம் தலைமையில் இடம்பெற்றது.
அல்- ஹிமா சமூக சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.ஏ. நூருல்லா B.A (நளீமி) அவர்களின் முயற்சியில் குவைட் நாட்டின் ISLAMIC CARE SOCIETY இன் நிதியுதவியுடன் பாத்திமா அப்துல் வஹாப் அர்ரிபாயி அவர்களின் ஞாபகார்த்தமாக இக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முகமது (நளீமி) -பணிப்பாளர் ஜாமிய்யாஹ் நளீமியா விசேட அதிதிகளாக இலங்கைக்கான குவைத் தூதுவரின் விஷேட பிரதிநிதி அஷ்ஷெய்க் எம்.எம் பிர்தவ்ஸ் (நளீமி) அல்- ஹிமா சமூக சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.ஏ.நூருல்லா B.A (நளீமி)
அதன் தலைவர் அல் ஹாஜ் ஆர்.எம்.அமீனுதீன் பொலிஸ் அத்தியட்சகர் சந்திர பண்டார, மற்றும் அதிபர்,ஆசிரியர்கள், பழய மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.