முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கடன் அட்டையில் இருந்து கிட்டத்தட்ட 400 அமெரிக்க டொலர்கள் மோசடியான முறையில் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ரோஹித ராஜபக்ஷ கடந்த 3ஆம் திகதி மாத்தறையில் உள்ள வீடொன்றுக்கு சென்று கொண்டிருந்த போது தனது கடன் அட்டை காணாமல் போனதாக நாரஹேன்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, சம்பந்தப்பட்ட தனியார் வங்கியின் தலைமை அலுவலக மேலாளருக்கு உரிய வங்கிக் கணக்கு அறிக்கைகளை வெளியிட உத்தரவிட வேண்டும் என போலீஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.