ரமழான் என்பது அல்குர்ஆன் இறங்கிய மாதமாகும். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை ஒவ்வொரு ரமழானிலும் சந்தித்து அல்குர்ஆனை பரஸ்பரம் படித்திருக்கிறார்கள்.
அந்த வகையில், கல்விக்கான- போதனைக்கான மாதமாக இது இருக்கிறது.
அதேவேளை ரமழான் காலத்தில் சமூகத்தை வழிநடத்துவதற்கும், நெறிப்படுத்துவதற்கும், உலமாக்களுக்கும் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் பல விதமான வாய்ப்புகள் கிடைக்கின்றன.
அந்த ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் எவ்வாறு உச்ச கட்டமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கான வழிகாட்டல் நிகழ்வு இன்று (03) சனிக்கிழமை இரவு 8.15 மணி அளவில் (Zoom) ஸூம் தொழில்நுட்ப வழியாக நடைபெற உள்ளது.
உலமாக்களுக்கு மட்டுமன்றி ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தை வழி நடத்துபவர்கள், பள்ளி நிர்வாகிகள் போன்றோருக்கும் இந்நிகழ்ச்சி பயனுள்ளதாக அமையும்.
நடாத்துபவர்:- அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)
ஏற்பாடு:- ஜம்இய்யதுல் உலமாவின் அனுராதபுர மாவட்ட நாச்சியாதீவு கிளை
காலம்:- 11.03.2023 (சனிக்கிழமை)
நேரம்:- இரவு 8.15 மணி(ஸூம் வழியாக)
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/4321884321