அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா திஹாரி கிளையின் ஏற்பாட்டில், கடந்த 13 ஆம் திகதி ரமழான் வழிகாட்டல் என்ற தலைப்பில் லப்ஸன் திருமண மண்டபத்தில் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கும், இமாம்களுக்குமான விஷேடக் கூட்டம் நடைபெற்றது.
அஷ்ஷெய்க் ஸைபுல்லாஹ் இஹ்ஸானியின் தலைமையில் அஷ்ஸெய்க் அர்கம் காரியின் கிராஆத்துடன் கூட்டம் ஆரம்பமானதுடன் அஷ்ஷேக் இஜ்லான் நூரி வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதேவேளை இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் அம்ஜத் ரஷாதி ‘ஆலிம்களின் பணியும் சமூகத்தின் கடமைகளும்’ எனும் தலைப்பிலும் , அஷ்ஷெய்க் ஹஸன் பாரிஸ் மதனி ‘அமானிதம் பேணுவோம்’ எனும் தலைப்பிலும், அஷ்ஷெய்க் ஸைபுல்லாஹ் இஹ்ஸானி ‘ஜம்மியத்துல் உலமாவின் பணிகளும் எமது எதிர்கால நடவடிக்கைகள்’ எனும் தலைப்பிலும் விசேட உரைகள் நிகழ்த்தினார்கள்.
இதனைத்தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றதுடன் கப்பாரத்துல் மஜ்லிஸுடன் நிறைவுபெற்றது.