நீதிமன்றத்தில் ஆஜரானார் இம்ரான் கான்!

Date:

பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு பிரதமராக இருந்தபோது இம்ரான் கான் வெளிநாட்டுத் தலைவர்கள் அளிக்கும் விலை உயர்ந்த பரிசு பொருட்களை பாதுகாத்து வரும் அரசாங்கம் கருவூலமான தோஷகனாவிடம் இருந்து பரிசுப் பொருட்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக விற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இந்த வழக்கில் இம்ரான் கான் ஆஜராகாமல் இருந்து வந்ததால் அவருக்கு எதிராக பிணையில் வெளியில் வர முடியாத கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என இம்ரான் கான் தாக்கல் செய்து இருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்குகள் மட்டுமின்றி பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த 2 வழக்குகளிலும் இம்ரான் கானை தங்கள் முன்பு பொலிஸார் ஆஜர்படுத்த வேண்டும் என இஸ்லாமாபாத் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டு பிணையில் வெளியில் வரமுடியாத கைது வாரண்டை சில நாட்களுக்கு முன்பு பிறப்பித்தது.

இதையடுத்து இம்ரான் கானை கைது செய்வதற்காக லாகூரில் உள்ள வீட்டுக்கு பொலிஸார் சென்றனர். அப்போது பொலிஸாருக்கும், இம்ரான்கான் கட்சி தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

பொலிஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த நிலையில் கைது உத்தரவை ரத்து செய்யக்கோரி இம்ரான்கான் தரப்பில் தாக்கல் செய்து இருந்த மனுவை விசாரணை செய்யுமாறு செசன்ஸ் நீதிமன்றம் இந்த கைது உத்தரவை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து பொலிஸார் கைது நடவடிக்கையை கைவிட்டனர். நேற்று இம்ரான் கான் லாகூர் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

அங்கு அவர் மீது தொடரப்பட்டுள்ள 8 பயங்கரவாத வழக்குகளுக்கு அவருக்கு பிணையில் வழங்கப்பட்டது.

பரிசு பொருட்கள் விற்பனை முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் இன்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புக்காக ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

 

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...