உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் இன்றுடன் முடியவுள்ள நிலையில் புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வுகள் நகரசபை உத்தியோகத்தர்களினால் நேற்று நடாத்தப்பட்டன.
இதன்போது, உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் கனத்த மனதுடன் புத்தளம் நகர பிதாவின் சேவைகளை பாராட்டி நினைவு கூர்ந்தனர்.
இதன்போது, நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக்கின் சேவையை பாராட்டி, உத்தியோகத்தினர்களால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த பிரியாவிடை நிகழ்வில் புத்தளம் நகரசபை செயலாளர்,நிர்வாக உத்தியோகத்தர் உட்பட அலுவல உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.