பங்களாதேஷில் பயங்கர விபத்து: பேருந்து கவிழ்ந்து 19 பேர் பலி!

Date:

பங்களாதேஷில் வேகமாகச் சென்ற பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் 19 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் காயமடைந்தனர்.

பங்களாதேஷ் மாநிலம் டாக்காவை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று , மதரிபூரில் உள்ள ஒரு விரைவுச் சாலையில் இன்று காலை 7.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் எனவும் அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளார்கள்.  மேலும், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அதிகாரிகள் அவர்கள் தெரிவித்தனர்.

மோசமான பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் காரணமாக பங்களாதேஷில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.பங்களாதேஷில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 9,951 பேர் உயிரிழந்துள்ளனர்.

Popular

More like this
Related

தாஜூதீன் கொலை செய்யப்பட்ட காலத்தில் பாதுகாப்பு அமைச்சில் பணிபுரிந்த கஜ்ஜா: குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையில் தகவல்

வசிம் தாஜுதீன் கொலை நடந்தபோது, ​​மீகசரே கஜ்ஜா என்று பிரபலமாக அறியப்பட்ட...

2030 சவூதி விஷன்; அனைத்து விசா வகையினருக்கும் உம்ரா அனுமதி

புனித உம்ரா கடமையை எளிதாக நிறைவேற்றும் பொருட்டு சவூதி அரசாங்கம் சிறப்புத்...

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி இன்றும் நாளையும்

‘தர்மத்தின் மூலம் நல்லிணக்கம்’ என்ற தலைப்பில், நாடுகளிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் வளர்க்கும்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை!

இன்றையதினம் (08) நாட்டின் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது...