சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அங்கீகாரம் இன்று!

Date:

இலங்கைக்கு நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அங்கீகாரம் இன்று (20) அறிவிக்கப்பட உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கை நேரப்படி இன்று இரவு கூடவுள்ளதுடன், இதற்கான அனுமதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

குழு கூட்டத்தின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக இது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி இன்னும் 4 ஆண்டுகளில் பெறப்பட உள்ளதுடன், முதல் தவணையாக 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மார்ச் மாத இறுதியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...