உள்ளூராட்சி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ காலத்தை நீடிக்க முடியுமா? சட்டமா அதிபரின் பரிந்துரை இன்று (20) பெற்றுக்கொள்ளப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
அதற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
340 உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ காலம் நேற்று (19) நள்ளிரவுடன் நிறைவடைந்தது.
இதில் 29 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் அடங்கும்.
நாடளாவிய ரீதியில் 341 உள்ளூராட்சி மன்றங்கள் நிறுவப்பட்ட போதிலும், காலி மாவட்டத்தின் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றம் ஸ்தாபிக்கப்படுவது தாமதமானதால் அந்த உள்ளூராட்சி மன்றத்தின் பதவிக் காலம் முடிவடையவில்லை.
பதவிக்காலம் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக விவகாரங்கள் ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களின் கீழ் கொண்டு வரப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர மேலும் தெரிவித்தார்.