சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணை எடுப்புப் பொதியின் ஆரம்பப் பகுதியான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை விரைவில் பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
முதல் தவணையான 320 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வழங்கப்படலாம்.
இலங்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு மார்ச் 20 ஆம் திகதி அமெரிக்க நேரப்படி இரவு 10 மணிக்கு கூடவுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாளை (21) காலை 8.30 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.