குவைட் நிறுவனத்தின் அனுசரணையால் இலங்கைக்கு பல்வேறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், குவைட் நிறுவனம் அனுசரணையுடன் அல்- ஹிமா அமைப்பின் செயலாளரான அஷ்ஷெய்க் நூருல்லாஹ் அவர்களினால் சுமார் 65 பள்ளிவாசல்களுக்கு ரமழான் மாதத்தின் கஞ்சிக்கான பச்சை அரிசி விநியோகிக்கப்பட்டன.
நேற்றைய தினம் கள் – எலிய அல் – மஸ்ஜிதுஸ் சுப்ஹானி பள்ளிவாசல் நிர்வாக சபையின் உதவியுடன் விநியோகிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.