ரமழான் மாதத்தில் ‘ஒரு பில்லியன் உணவு’ என்ற நன்கொடை திட்டத்தை ஆரம்பித்தது ஐக்கிய அரபு அமீரகம்!

Date:

உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் ஒன்றை ஐக்கிய அரபு அமீரகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் ஆல் மக்தூம் (Mohammed bin Rashid Al Maktoum) ஆரம்பிக்கப்பட்ட ‘10 million meals’ திட்டமானது ‘100 million meals’ என அதிகரிக்கப்பட்டுக் கடந்த வருடம் ‘One Billion Meals’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே போல் இந்த வருடமும் துபாய் பிரதமர் ‘One Billion Meals’ திட்டத்தை அறிவித்துள்ளார்.

இதன் மூலம் சுமார் 50 நாடுகளில் உள்ள ஏழை, எளிய சமூகங்களுக்கு உணவு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஷேக் முகமது தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது, “உலகில் ஒவ்வொரு பத்து பேரில் ஒருவர் பசியால் வாடுகின்றனர். எனவே, அவர்களின் பசியாற்றப் பல தசாப்தங்களுக்கு நிலையான முறையில் மில்லியன் கணக்கில் உணவை வழங்குவதே இந்த முயற்சியின் குறிக்கோள்.

புனித மாதத்தின் ஆரம்பத்தில் எங்கள் வருடாந்த பாரம்பரியத்தின்படி, ரமழான் திருநாளில் ‘ஒரு பில்லியன் உணவு’ என்ற நன்கொடை திட்டத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

அதேவேளை, இந்த திட்டத்தின் மூலம் பிறரது பசியாற்றப் பல தசாப்தங்களாக ஒரு பில்லியன் உணவுகளை நிலையான வழியில் வழங்குவதே குறிக்கோள் என்றும், கடவுள் விருப்பத்தினால் ஐக்கிய அரபு அமீரகம் மக்களுக்குத் தொடர்ந்து தொண்டு மற்றும் தடையற்ற நன்மையை உறுதிசெய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...