உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்துவது குறித்து நாளைய தினம் (23) கூடவுள்ள கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதற்காகச் சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.