உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுமாறு பிரதமருக்கு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான கோரிக்கை எழுத்து மூலம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்த எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவை அழைத்து கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன அண்மையில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பில் விசேட குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக பஃபரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்தினால் கட்டுப்படுத்தப்படும் நிலைக்கு கொண்டு வரப்படும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டா

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...