நஷ்ட ஈட்டை செலுத்த இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளன; உங்களால் முடிந்ததைக் கொடுத்து உதவுங்கள்: முன்னாள் ஜனாதிபதி

Date:

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, குறித்த நட்டஈட்டை வழங்குவதற்கு தற்போது நண்பர்களிடமிருந்து இயன்றளவு பணம் வசூலித்து வருவதாக தெரிவித்தார்.

எனது ஆட்சிக் காலத்தில், நான் உலகின் நம்பிக்கையை வென்று ஜனநாயகத்தை நிலைநாட்டி, ஒரு நல்ல நாடாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஈஸ்டர் தாக்குதல்கள் நிகழ்ந்து அனைத்தையும் அழித்துவிட்டது.

‘இப்போது 100 மில்லியன் நட்ட ஈடு செலுத்துமாறு எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, நான் திருடவில்லை வெடிகுண்டு வீசவில்லை. நட்டஈட்டை செலுத்த எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் பணம் வசூலிக்கிறேன். உங்களால் முடிந்தால், முடிந்த தொகையை எனக்குக் கொடுங்கள்’ என்று அவர் மேலும் கூறினார்.

குறித்த காலத்திற்குள் இழப்பீட்டுத் தொகையை செலுத்த முடியாத பட்சத்தில் நீதிமன்றம் தமக்கு எதிராக என்ன தீர்மானத்தை எடுக்கும் என்பது தனக்குத் தெரியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...