லண்டனைச் சேர்ந்த பில்லியனர்களான ஈஸா சகோதரர்கள் 8 பில்லியன் பவுண் ($9.87 billion) பெறுமதியான சாண்ட்விச் உணவகச் சங்கிலியை கையகப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
2001 ஆம் ஆண்டில் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்துடன் தங்கள் வணிகப் பேரரசைத் தொடங்கிய மொஹ்சின் ஈஸா மற்றும் ஜூபர் ஈஸா சகோதரர்கள், 2021 ஆம் ஆண்டில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் 37,000 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்டிருந்த சப்வே சாண்ட்விச் உணவகச் சங்கிலியை வாங்கத் தயாராகி வருகின்றனர்.
வளர்ந்து வரும் வணிக சாம்ராஜ்யத்திற்கு உணவகச் சங்கிலி மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று ஈசா சகோதரர்கள் நம்புகின்றனர்.
ஏலவே யூரோ கரேஜஸ் நிறுவனத்தைச் சொந்தமாக்கியுள்ள இவர்கள், உலகளவில் 6,600க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களை இயக்கும் TDR கேபிட்டலுக்கும் உரிமையாளர்களாக உள்ளனர்.
இந்தப் பெட்ரோல் நிலையங்களில் 340 இடங்களில் ஏற்கனவே சப்வே விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன.
நிலையில் மொத்த சப்வே விற்பனை நிலையங்களையும் தமதாக்கிக் கொள்ள அவர்கள் முனைந்து வருகின்றனர்.
யார் பொஸ் என்பதைக் காட்ட வேண்டுமானால் அவர்களை வாங்குவது தான் ஒரே வழி என்கிறார்கள் ஈஸா சகோதரர்கள்.