‘கபூரிய்யா பொதுச்சொத்தை உண்ணாதே’: புத்தளத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Date:

மஹரகம கபூரிய்யாவின் வக்பு செய்யப்பட்ட பொதுச்சொத்து அபகரிப்புக்கு எதிராக இன்று முதன்முறையாக கொழும்புக்கு வெளியில் புத்தளம் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தை புத்தளம் கபூரிய்யா பழைய மாணவர்கள் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்கமைய இன்று (31) ஜும்ஆ தொழுகையின் பின்னர் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கபூரியா பொதுச்சொத்தை சூறையாடதே, வக்பு ஒரு பொதுச்சொத்து மறுமையின் நெருப்பை உண்ணப்போகிறாயா, பொதுச்சொத்தை காப்பாற்ற ஒன்றுபடுவோம் உள்ளிட்ட வசனங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...