உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி தாமதமானமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கினால், விடைத்தாள்களை உடனடியாக சரிபார்க்கும் பணியை ஆரம்பிக்க தயார் என அதன் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னஹக்க தெரிவித்துள்ளார்.
வரிக் கொள்கையால் அநீதி இழைக்கப்படும் எங்கள் உறுப்பினர்களுக்குச் சிறிது நிவாரணம் தேவை என்ற அடிப்படையில். உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக நாம் முடிவு செய்துள்ளோம்.
இதில் வேறு எந்த கோரிக்கையும் இல்லை. அதே சமயம் சிளர் இனவாத பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கின்றனர். இங்கு சிங்களம்,தமிழ் என்ற பேச்சு கிடையாது.
இதில் கலந்து கொள்ளாத அனைவரும் பல்கலைகழக விரிவுரையாளர்கள் மட்டுமின்றி பாடசாலை ஆசிரியர்களும் கூட. அதனால்தான் இந்த நிலை தொடர்கிறது.
தொடரும் இழுபறிக்கு நாம் பொறுப்பல்ல. எனவே அரசாங்கம் சாதகமான பதில் அளித்தால் எந்த நேரத்திலும் இப்பணியை தொடங்க தயாராக உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்