டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது மகனுடன் இப்தார் விருந்தை பகிர்ந்து கொள்ளும் வீடியோ!

Date:

இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில்ஒருவரான சானியா மிர்சா இஃப்தார் கொண்டாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

சானியா மிர்சாக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கிற்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் திகதி திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இஷான் என்ற ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில், மெக்காவின் மதீனாவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்ட டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, அவர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில், “இஃப்தார் என் உடன்” என்ற தலைப்பில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் கணவர் இல்லாமால், அவர் தனது மகனுக்கு இப்தாரில் நோன்பு திறப்பது எப்படி என்று கற்றுக் கொடுப்பதைக் காணலாம்.

அதில், சானியா தனது மகனுக்கு உணவைத் தொடங்குவதற்கு முன் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வழிகாட்டுவதைக் காணலாம். மனதைக் கவரும் இந்த வீடியோ 1.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 176 ஆயிரம் விருப்பங்களையும், ஆயிரத்திற்கும் அதிகமான கமெண்ட்டுகளையும் பெற்றுள்ளது.

இதற்கிடையில் சானியா மிர்சா, தனது குடும்பத்தினருடன் மக்காவில் உம்ரா செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/CqoIKBBMjxV/

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...