காலி முகத்திடலில் ஆரம்பமான மக்கள் ‘போராட்டத்திற்கு’ இன்றுடன் ஓராண்டு பூர்த்தி

Date:

2022 ஏப்ரல் 9ஆம் திகதி காலி முகத்திடல் ஆரம்பமான மக்கள் ஆர்ப்பாட்ட களத்திற்கு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.

இதனை முன்னிட்டு இன்றைய தினம் (09)  காலிமுகத்திடலில் நினைவேந்தல் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாகவும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘கோட்டா தோல்வி ரணில் விற்பனை’, பயங்கரவாதச் சட்டத்தை ரத்து செய், மக்கள் அதிகாரத்தை கட்டியெழுப்புதல் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு புகையிரத நிலையத்தில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ‘அரகலயா’ மே 9 ஆம் திகதி பாரிய இயக்கமாக மாறியது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் பொதுஜன பெரமுன அரசாங்கம் உட்பட பல அரசாங்க அதிகாரிகள் 2022 ஆம் ஆண்டு போராட்டம் காரணமாக பதவிகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

இதில் கலந்துகொண்ட சம்பவங்களால் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 40 பேர் இறந்தனர்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...