2025 ஆம் ஆண்டுவரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைக்கப்படலாம்: பெப்ரல் அமைப்பு!

Date:

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்கப்படலாமென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி, தேர்தலை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் அரசாங்கம் எடுப்பதாக தெரியவில்லை என குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்……
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்துவதை ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த தேர்தல் இந்த வருடம் இடம்பெறுவதற்கு மிகவும் குறுகிய சந்தர்ப்பமே தற்போது இருக்கிறது. தேர்தலை நடத்துவதற்கும் அரசாங்கம் எந்த தயாரும் இல்லாத நிலையே காணக்கூடியதாக இருக்கிறது.
அத்துடன் நாட்டின் தேர்தல் சட்டம், அரசியலமைப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவு ஆகிய எதனையும் கருத்திற்கொள்ளாது அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் இருப்பதறகான நடவடிக்கையை மேற்கொண்டு செல்வதையே காணக்கூடியதாக இருக்கிறது.
அதனால் நீதிமன்ற உத்தரவு ஒன்றை தவிர 2025 வரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுவது நிச்சயமற்ற நிலை இருப்பதாகவே  கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது எமக்கு தெரிகிறது.
ஏனெனில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற இருக்கிறது. அதற்காக ஓகஸ்ட், பெப்டம்பர் மாதமாகும் போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றன. அதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்படும் நிலையே காணக்கூடியதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...