குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது குறித்து ஆராய விசேட குழு நியமனம்!

Date:

இலங்கையின் ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவது தொடர்பான ஆய்வுக்காக 4 அமைச்சுக்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் வனவிலங்கு, நீதி, பெருந்தோட்டங்கள் மற்றும் விவசாய அமைச்சுக்களின் அதிகாரிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள குரங்குகளை சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, இலங்கையின் குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் முறையான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும், முறையாக பரிசோதிக்கப்பட வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...