தீக்கிரையான பட்டாசு கடை!

Date:

கிரியுல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பட்டாசு விற்பனை கடை ஒன்றில் தீ பரவியுள்ளது.

நேற்றிரவு தீ பரவியதாகவும், கிரியுல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தீ விபத்தால் கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்தில் இருபுறமும் உள்ள இரண்டு கடைகளின் சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரியுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...