மே மாதத்தின் பின்னர் அரை சொகுசு பஸ் சேவை நிறுத்தப்படும்!

Date:

இலங்கையில் அரை சொகுசு பஸ் சேவை 2023 மே மாதத்தின் பின்னர் சேவையில் இருந்து நீக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அரை சொகுசு பஸ் சேவை தொடர்பில் பாரியளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து அமைச்சின் வழிகாட்டுதலின்படி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இயங்குகிறது என்றும், அரை சொகுசு பஸ் சேவையை சாதாரண சேவையாகவோ அல்லது சொகுசு பஸ் சேவையாகவோ மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

“அரை சொகுசு பஸ்களின் உரிமையாளர்கள் தங்கள் பஸ்களை சாதாரண பஸ் அல்லது சொகுசு பஸ்களாக மாற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவை மாற்றத்திற்காக உரிமையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. இது இலவசமாக செய்யப்படும்,”

தற்போது இயங்கி வரும் 430 அரை சொகுசு பஸ்களில், 20 பஸ்களின் உரிமையாளர்கள் மாற்றம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...