முட்டை விலை தொடர்பில் அறிவிப்பு!

Date:

எதிர்வரும் இரண்டு வாரங்களில், முட்டை விலையை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் எதிர்காலத்தில் முட்டையின் விலையை குறைக்க முடியும் என அவர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதன்படி, கட்டுப்பாட்டு விலையை மீறி முட்டையை விற்பனை செய்வோருக்கு இடமளிக்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு முட்டைகள் விற்பனை செய்யப்படுமாயின் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு 30 ரூபாவுக்கும் குறைவாக உள்ளதாக முட்டை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

நிலவும் சீரற்ற வானிலை: க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர உதவி இலக்கங்கள் அறிவிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு...

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல் நீடிப்பு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது...

புனித மக்கா மண்ணில் மிளிரும் இலங்கையின் குரல்: சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸயீத் முஹம்மத் இப்பத்!

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம்...