தூய்மையான சக வாழ்வின் வெளிப்பாடாக வந்த நோன்புப் பெருநாள் வாழ்த்து!

Date:

கடந்த இரண்டு வருடங்களாக புத்தளம் பிரதேசத்தில் சர்வமத அமைப்பின் மூலம் அறிமுகமாகி பல்வேறு சமய, நல்லிணக்க பணிகளில் உற்சாகமாக பணியாற்றி வருபவர்.

புத்தளம் நகரில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் பணியாற்றும்  அருட் சகோதரரி ரட்னமலர்  மத பேதமின்றி அனைத்து சமூகங்களிடையேயும் நெருக்கமான உறவைப் பேணுபவர்.

தொலைபேசியில் உரையாடுவது, அன்பளிப்புக்களை பரிமாறுவது மட்டுமன்றி தனது தேவாலயம் மூலமாக வறிய குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்படும் போது, முஸ்லிம்கள் தரப்பிலிருந்து தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கு எம்மிடமே ஆலோசனை பெறுவார்.

இந்த உறவின் வெளிப்பாடாக, பெருநாள் தினமான நேற்று,  அனுப்பிய வாழ்த்து அர்த்தம் நிறைந்த ஒன்றாக இருப்பதால் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எகீனா
கடும் சூட்டையும் தாங்கி…..
வெயிலின் கொடுமையையும் தாங்கி…….
வலிதரும் தாகத்தையும் தாங்கி……
வயதான உம்மாவையும் தாங்கி…..
இவை எல்லாவற்றையும் விட கடைக்குட்டியின் அழுகையையும் தாங்கி……..
கடைபிடித்து பெற்ற நோன்புப் பெருநாளிலே……….
சகல தீமைகளும் அகன்று……..
சகல நன்மைகளையும் நிறைவாய் பெற……….
நோன்பின் பலனை நிறைவாய் பெற…….
உங்கள் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள் 🤝

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...