சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை தவிர மாற்று வழியொன்று இல்லை: ஜனாதிபதி

Date:

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான மூன்று நாள் பாராளுமன்ற விவாதத்தில் இன்று காலை கலந்து கொண்ட ஜனாதிபதி,

வெளிநாட்டு கடனாளிகளுடனான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் போது, ​​இலங்கை தனது உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதற்கான அனுமதியை அனைவரும் நாடாளுமன்றில் பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை தவிர மாற்று வழியொன்று இல்லை.
மாற்று வழியொன்று இல்லாத நிலையில், யாரும் அவ்வாறான வழிமுறையொன்றை முன்வைக்காத போதே, சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல நடவடிக்கை எடுத்திருந்தோம்.

நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து இதற்கான அனுமதியை நாடாளுமன்றில் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதனை தற்போது செய்யாவிட்டால் நாட்டின் இளைய தலைமுறையை காட்டிக்கொடுத்தது போலாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் முழு நாடாளுமன்றமும் அரசாங்கமாக மாறி எதிர்வரும் 2048ஆம் ஆண்டு வரை ஒரு கொள்கையொன்றில் பயணிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்போம். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்று பாராமல் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னெடுத்துச் செல்வோம்.

தற்போது பல தொழிற்சங்கங்களுக்கு வரி உள்ளிட்ட பல விடயங்களில் பிரச்சினைகள் உள்ளன. அவற்றை பேசித் தீர்த்துக் கொள்வோம். 6 மாதங்களுக்கு ஒருமுறை “தேசிய சபை” போன்றவற்றின் ஊடாக இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்போம் என கூறியுள்ளார்.

 

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...