கொழும்பில் மாடி வாகன தரிப்பிடங்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை

Date:

நாளாந்தம் கொழும்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளுக்குள் பிரவேசிக்கும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கொழும்பில் நான்கு பல மாடி வாகன தரிப்பிடங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உத்தரவுக்கமைய நகர அபிவிருத்தி அதிகாரசபையால்  இந்த வாகன நிறுத்துமிடங்கள் தனியார் மற்றும் அரச துறைகளின் ஆதரவுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மாடி வாகன நிறுத்துமிடங்களில் இரண்டு UDA வினால் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், ஏனைய இரண்டு வாகன நிறுத்துமிடங்களும் தனியார் துறையினரால் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு முன்னால், பழைய மீன் சந்தை மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய இடங்களில் இந்த வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கொழும்பு -02 இல் தனியார் துறையினரால் நிர்மாணிக்கப்பட்ட பொது வாகன தரிப்பிடம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

தனியார் நிறுவனமான அக்சஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தால் இந்த கார் நிறுத்துமிடம் 1400 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன்,கார் நிறுத்துமிடத்தின் உரிமை 30 வருடங்களுக்கு பின்னர் UDA க்கு மாற்றப்படும்.

எட்டு அடுக்குகளைக் கொண்ட இந்த கார் நிறுத்துமிடத்தில் 300 வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளது. ஒப்பந்தத்தின்படி, கார் நிறுத்துமிடத்தின் மாத வருமானத்தில் 20% UDA பெறும்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...