ஜனாதிபதி வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில் சந்தேகநபரானார் ஸ்ரீ ரங்கா!

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை எரித்த சம்பவத்தில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்காவை குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகநபராக பெயரிட்டுள்ளனர்.

இதற்கமைய, ஜெ. ஸ்ரீரங்காவை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...