இறைவரித் திணைக்களத்துக்கு வருவாயை விட அதிகமாக வருமானம்!

Date:

முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், தமது வரி வருமான இலக்கைத் தாண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊராபொல பிரதேசத்தில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இலக்கு வருவாயை விட 105% அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று ஒரு தேசிய நாளிதழில் முதல் காலாண்டில் எதிர்பார்த்த வருவாயில் 19% மட்டுமே ஈட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று அமைச்சர் கூறினார்.

மேலும், முதல் காலாண்டில் சுங்கத்துறை எதிர்பார்த்த வருவாயில் 89% ஈட்டியுள்ளதாகவும், மதுவரி திணைக்களம் 64% வருமானம் ஈட்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...