பாடசாலை போக்குவரத்து சேவையின் கட்டணத்தை குறைக்க அவதானம்!

Date:

பாடசாலை போக்குவரத்து சேவையின் கட்டணத்தை குறைப்பதற்கு அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

நேற்று(30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் மல்சிறி டி சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறைக்கப்படும் கட்டணம் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால், பெற்றோர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே, விலைகுறைப்பின் நன்மையினை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் மல்சிறி டி சில்வா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...