தென்மேற்கு எகிப்தில் பாரிய விபத்து: 17 பேர் சம்பவ இடத்திலேயே பலி

Date:

தென்மேற்கு எகிப்தில் நியூ பள்ளத்தாக்கு மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் 45 பேரை ஏற்றிக் கொண்டு தலைநகர் கெய்ரோவுக்கு சென்ற பயணிகள் பேருந்து சென்றுக் கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த விபத்தில், 29 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், விபத்துக்குள்ளானவர்களை மீட்பதற்காக விபத்து நடந்த இடத்திற்கு சுமாா் 26 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் விவரிக்கவில்லை. இங்கு விபத்துகள் பெரும்பாலும் வேகம், மோசமான சாலைகள் அல்லது போக்குவரத்து சட்டங்களை சரியாக செயல்படுத்தாததால் ஏற்படுவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...