யாழில் இருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை ஆரம்பம்

Date:

இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாத யாத்திரை வழமைபோல இம்முறையும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து பக்தர்கள்  ஆரம்பித்தனர் .

இந்த பாத யாத்திரை செல்வசாந்தி முருகன் இந்து ஆலயத்தின் பிரதமகுரு ஜெயவேல்சாமி தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், யாழ்ப்பாணம் தொண்டமனாறு பிரதேசத்தில் வசிக்கும் பக்தர்கள் குழு மற்றும் முல்லைத்தீவு பிரதேச பக்தர்கள் குழுவினர் கதிர்காமம் நோக்கி பயணிக்கவுள்ளனர். .

வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மொனராகல என 7 மாவட்டங்களையும் இணைத்து 46 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இப் பாத யாத்திரை இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாத யாத்திரையாக கருதப்படுகின்றது.

கடந்த 23 வருடங்களாக சைவ மரபு பாரம்பரியத்துடன் இடம்பெற்றுவரும் இப் பாத யாத்திரை கதிர்காமக் கந்தனாலய கொடியேற்றத்தினத்தில் கதிர்காமத்தைச் சென்றடைவது வழமையாகும்.

செல்வச் சந்நிதி ஆலயத்தில் காலை நடைபெற்ற விசேட பூசையினைத் தொடர்ந்து மோகன் சுவாமியால் வேலாயுதமானது கதிர்காம பாத யாத்திரைக் குழுத்தலைவரிடம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்பட்டதோடு, ஆரம்பமாகியுள்ள பாத யாத்திரை வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தை அடைந்த பின்னர் அங்கிருந்து வழமையாக பயணிக்கும் நூறு பக்தர்களுடன் பாதயாத்திரை தொடர்ந்து இடம்பெறும்.

பாத யாத்திரைக்கான சகல அனுமதிகளும் வழமைபோல பெறப்பட்டிருப்பதாக பாத யாத்திரைக் குழுத்தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கதிர்காம ஆடிவேல்விழா உற்சவத்திற்கான கன்னிக்கால் அல்லது பந்தல் கால் நடும் வைபவம் இன்று நடைபெறவுள்ளது.

ஜூன் 19ஆம் திகதி கொடியேற்றம் இடம்பெற்று ஜூலை 4ஆம் திகதி எசலபெரஹராவுடனான தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...