ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9 மணி வரை இது அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை மாவட்டத்தில் பசறை பிரதேச செயலகப் பகுதியிலும் மாத்தளை மாவட்டத்தில் பல்லேபொல பிரதேச செயலகப் பகுதியிலும் நாளை காலை 9 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும்.
மேலும், காலி மாவட்டத்தில் உள்ள பத்தேகம, நாகொட, எல்பிட்டிய மற்றும் யக்கலமுல்ல பிரதேச செயலகப் பிரிவுகளிலும், யட்டியந்தோட்டை, ரம்புக்கன, தெரணியகல, மாவனல்ல, கேகாலை, கலிகமுவ பிரதேச செயலகப் பகுதிகளிலும், கேகாலை மாவட்டத்திலும் வசிப்பவர்களுக்கும் முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம, அலவ்வ மற்றும் பொல்கஹவெல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.