நுவரெலியா வைத்தியசாலையில் தவறான மருந்தால் 10 பேருக்கு பார்வைக் குறைபாடு!

Date:

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 10 நோயாளர்களுக்கு முழுமையான கண்பார்வை இழப்பு அல்லது பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் காணப்பட்டதன் காரணமாக சத்திர சிகிச்சையின் பின்னர் நோயாளர்களின் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 05 ஆம் திகதிக்கு பின்னர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகளே கண்பார்வை இழந்துள்ளனர் அல்லது பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சத்திரசிகிச்சைக்கு பின்னர் வழங்கப்பட்ட மருந்துகளினால் முழுமையாக கண்பார்வை இழந்தவர்கள் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த நோயாளர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு படிப்படியாக குணமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் உரிய அரச அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு பழுதடைந்த மருந்தை இறக்குமதி செய்த நிறுவனத்துக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...