ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளதையிட்டு இன்று பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதற்கு இணக்கம் தெரிவித்தார்.
இதனையடுத்து, ஒரு நிமிடம் இந்த மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 2022 மே 09 ஆம் திகதி மாலை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் நிட்டம்புவவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை சுற்றிவளைத்த குழுவொன்று, அவரை வாகனத்திலிருந்து இறக்கி துரத்திச்சென்று சுட்டுக்கொலை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.