இலங்கை திரையரங்குகளில் முதல் முறையாக வெளியான பாகிஸ்தான் திரைப்படம்!

Date:

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரனையில் ‘Money Back Guarantee’ என்ற திரைப்படம் அண்மையில் கொழும்பு திரையரங்கில் காட்சிபடுத்தப்பட்டது.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வேகப் பந்து வீச்சாளர் வசீம் அக்ரம் அவரது மனைவி மற்றும் மேலும் சிலர் நடித்த இந்தப்படம் வங்கிக் கொள்ளை சம்பந்தமான உருது மொழியில் வெளியான திரைப்படமாகும்.

இத் திரைப்படம் கொழும்பில்  One gall face இல்உள்ள PVR ‘திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அலுவலக ஊடகச் செயலாளர் அழைப்பின் பேரில் ஊடகவியலாளர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா, மற்றும் அரசியல் பிரமுகர்களும் இத் திரைப்படத்தினை கண்டுகழித்தனர்.

பழம்பெரும் கிரிக்கெட் வீரரான வாசிம் அக்ரம் மற்றும் அவரது மனைவிக்கு  ‘Money Back Guarantee’ அறிமுக திரைப்படமாகும்.

இந்தத் திரைப்படம் மே 2020 இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸின் உலகளாவிய தாக்கம் காரணமாக அதன் வெளியீட்டில் பெரும் தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...